கம்பஹா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி.சாகர காரியவசம் தலைமையில் நேற்று -14- மாலை கட்டுப்பணம் செலுத்தியது.


இதன்மூலம் 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை பெரமுன செலுத்தியுள்ளது. கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சாகர காரியவசம், கம்பஹா மாவட்டத்திற்கான பிணைப் பணத்துடன், நாடளாவிய ரீதியில் பொதுஜன பெரமுன போட்டியிடும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான பிணைப்பணமும் செலுத்தி முடித்துள்ளதாகவும், எனவே தேர்தலில்வெற்றி நிச்சயம் எனவும் குறிப்பிட்டார்.


சில அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தப்படாது என அறிவிக்கும் சூழ்நிலையிலும், மின்சாரக் கட்டணம், வரி அதிகரிப்பு, தாங்க முடியாத வாழ்க்கைச் சுமை போன்றவற்றிலும் பொதுஜன பெரமுன வெற்றி பெறுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.


இதைப் புரிந்துகொள்ளக்கூடிய நாட்டின் புத்திசாலி மக்கள் மின்சாரக் கட்டணம், வரிகள் அதிகரித்தாலும் பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.