உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், அவர் தாக்கல் செய்த இந்த மனுவில் அமைச்சரவை செயலாளர் மற்றும் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி மாவட்ட செயலாளர்களுக்கு வேட்புமனுக்களை ஏற்க வேண்டாம் என உள்ளாட்சி செயலாளர் தெரிவித்திருப்பது சட்ட விரோதமானதாகும். அந்த கடிதம் தேர்தலை நடத்த தடையாக உள்ளது. இது அடிப்படை உரிமை மீறலாகும்.

எனவே தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்த மனுவை விசாரிக்க அனுமதி வழங்கி உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கேட்டுள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.