சம்மாந்துறை உடங்கா ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு;பொலிஸார் தீவிர விசாரணை


அம்பாரை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்நெல் கிராமம் 02ஆம் பிரிவில் நெல்லுச்சேனை உடங்காறு அணைக்கட்டு நீர்த்தேக்கப் பிரதேசத்தில் நேற்று மாலை சுமார் 6.10 மணியளவில் ஆண் ஒருவரின் சடலமொன்று பொது மக்களினால் கண்டெடுக்கப்பட்டது.


சம்மாந்துறை செந்நெல் கிராமம் 02ஆம் பிரிவு நெல்லுச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் றஹீம் முஹமட் சஸ்னி (வயது 21) என்பவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை குறித்த நபரின் பெற்றோர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 


இதே வேளை, இம்மரணம் குறித்து மரணித்தவரின் பெற்றோர்கள் சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். 


சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் மரணித்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இதே வேளை, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அம்பாரை மாவட்ட தடயவியல் (SOCO) பொலிஸார் நேரில் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தினை சூழவுள்ள பிரதேசத்தில் அதிகளவான வெற்று மதுப் போத்தல்களை காணக் கூடியதாக இருந்தது.


சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து தூரம் சுமார் 300 மீற்றர் தூரத்திலேயே சடலமாக மீட்கப்பட்ட அப்துல் றஹீம் முஹமட் சஸ்னி என்பவரின் வீடு அமைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.