கஹட்டோவிட்ட பாதிபியன்ஸ் இளைஞர் கழகத்திற்கு அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பாதிபியன்ஸ் இளைஞர் கழகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

பாதிபியன்ஸ் இளைஞர் கழகம் அரச இளைஞர் கழகத்தின் கீழ் பதியப்பட்டு 7 வருடங்களாக 369 கிராம சேவகர் பிரிவில் சிறப்பாக இயங்கி வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்!

அரச இளைஞர் கழகத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் கல்வி மற்றும் விளையாட்டு, கலாச்சார, தொழில் மற்றும் தலைமைத்துவ பயிற்சி நெறிகள் என பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 அரச இளைஞர் கழகத்தில் 12 வயது தொடக்கம் 29 வயது வரையிலான அங்கம் வகிக்க விரும்பும் இளைஞர் யுவதிகள் கீழுள்ள Link இனூடாக பதிவுகளை மேற்கொள்ளவும்.

 மேற்படி விடயம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்ஷாஅல்லாஹ் பின்வரும் தினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் 12 வயது தொடக்கம் 29 வயது வரையிலான அனைத்து இளைஞர்களும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

 காலம் :- 20.01.2023 வெள்ளிக்கிழமை

 நேரம்:-. இரவு 08:00 மணி

 இடம் :- பாதிபிய்யா மத்ரஸா மண்டபம்

 அன்றைய தினம் உங்கள் பெயர்களையும் இளைஞர் கழகத்தின் கீழ் பதிவு செய்ய முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு:

அரச இளைஞர் கழக அங்கத்துவமானது மேற்படிப்புகள் மற்றும் தொழில்வாய்ப்புகளுக்கு உதவும். மேலும் அங்கத்துவத்தை உறுதிப்படுத்த  அடையாள அட்டையும் வழங்கப்படும்.

மேலும் அரசாங்க இளைஞர் கழகத்தில் நீங்களும் இணைவதனூடாக இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பும் கிடைக்கிறது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

https://forms.gle/d7YKkhZWD8SHAgmP7

மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கு:

Zamry : 0779944300 

Fawas : 0770102672


இவ்வண்ணம்

பாதிபியன்ஸ் இளைஞர் கழகம் 

369 கஹட்டோவிட்ட

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.