எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்கள் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ரத்து செய்யப்படும் ரயில் பயணங்கள் கீழே...

பிரதான மார்க்கம்-18
களனிவெளி மார்க்கம் - 2
கரையோர மார்க்கம் - 8
புத்தளம் மார்க்கம் - 2


இதேவேளை, நேற்று (13ம் திகதி) அதிகாலை 5 மணியளவில் ஹபரன கல்ஓயா பிரதான ரயில் பாதையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புலதிசி கடுகதி ரயிலில் மோதி யானையொன்று உயிரிழந்துள்ளது.

காட்டு யானையுடன் மோதியதன் காரணமாக ரயிலின் இயந்திரம் தடம்புரண்டிருந்தது. இந்த விபத்து காரணமாக கிழக்கு மாகாணத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ரயிலில் அடிபட்ட காட்டு யானை சுமார் 15 மீட்டர் தூரம் ரயில் பாதையில் இழுத்து செல்லப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.