புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனுவை எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த மனுவில் கையொப்பமிடும் பணி தற்போதும் இடம்பெற்று வருவதாக ஊடக குழுவின் உறுப்பினர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக மருத்துவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இதனூடாக இந்த நியாயமற்ற வரித் திருத்தத்தை மாற்றி நாட்டில் நியாயமான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவார்கள் என்று நம்புகிறார்கள்.
அதன் ஒரு கட்டமாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 20,000 வைத்தியகர்களின் கையொப்பம் அடங்கிய மனுவொன்றை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது.
இதன்படி அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள சிறப்பு வைத்தியர்கள் உட்பட அனைத்து வைத்தியர்களும் இந்த மனுவில் கையெழுத்திடுகின்றனர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.