ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் "சுரக்ஷா" இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 15 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இன்று (15) நாடு திரும்பியுள்ளனர்.

அதிகாலை 04.50 மணியளவில் குறித்த வீட்டுப் பணியாளர்கள் குழுவானது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-206 விமானத்தில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக "அத தெரண" விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது, ​​117 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் ஓமானில் உள்ள சுரக்ஷா இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 17 பேர் இலங்கைக்கு அனுப்புவதற்காக ஓமானில் உள்ள மஸ்கட் விமான நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், இரண்டு வீட்டுப் பணியாளர்களின் ஆவணங்களில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அவர்கள் மஸ்கட் விமான நிலையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள குழு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.