வளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையம்
கடந்த வெள்ளிக்கிழமை (06-01-2023) இரவு புத்தளம் நகர மண்டபத்தில் நடாத்திய,
கவியரங்கம் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பெருந்திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க பிரபல அறிவிப்பாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க,
இஸ்லாமிய கீதங்களுடன் இரவு 08.15 மணியளவில் ஆரம்பித்த நிகழ்வு, இரவு 11.30 மணியளவில் நிறைவு பெற்றது.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு மற்றும் பணியை,
"முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்..!" என்ற மகுடம் தாங்கி 8 கோணங்களில் கவிதையால் அணுகிய இந்நிகழ்வு,
பொதுமக்களிடத்தில் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
கவியரங்கத்திற்கான தலைமையை,
கலாபூஷணம் . ஜவாத் மரைக்கார் அவர்கள் ஏற்றிருந்ததோடு,கவியரங்கக் கவிதைகளை,
01. கவிஞர் - நாகராஜா (ஓய்வுநிலை அதிபர் )
02. கவிஞர் - ஹிஷாம் ஹுசையின்
03. கவிஞர் - அப்துல்லாஹ் (ஆங்கில ஆசிரியர்)
04. கவிஞர் - இம்தாத் பசர்
05. கவிஞர் - எஸ். ஏ. சீ. பி. மறைகார்
06. கவிதாயினி - சகோதரி - ஷரூபியா ஆசிரியை
07. கவிஞர் ஷேய்க் - மின்ஹாஜ் (இஸ்லாஹி )
08. கவிஞர் - சகோ.எம். எச். முஹம்மது
என்போர் சமர்ப்பித்தனர