கடன் நிவாரணம் பெறுவதற்கு கடனாளிகள் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

பிரபல இந்திய பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், உலகின் தலைசிறந்த பொருளாதார புத்தகங்களில் ஒன்றான ´கெப்பிடல்´ புத்தகத்தின் எழுத்தாளர் தோமஸ் பிகெட்டி, கிரீஸின் முன்னாள் நிதியமைச்சர் யனிஸ் வரொபாகிஸ் மற்றும் 182 பொருளாதார நிபுணர்கள் இது தொடர்பாக தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு விரிவான கடனுதவி கிடைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் வெளிநாட்டுக் கடனில் 50 சதவீதமான சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களை வாங்கிய கடன் வழங்குநர்கள் ஏற்கனவே பெரும் லாபத்தைப் ஈட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்களும் இலங்கைக்கு மிகவும் அவசரமான தேவையாக இருக்கும் நேரத்தில் தமது பொறுப்புகளை நிறைவேற்றி உரிய முறையில் பதிலளிக்கத் தவறியுள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இலங்கை செலுத்த வேண்டிய கடனைத் துண்டித்து அல்லது கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் கடனாளிகள் உட்பட அனைத்து தரப்பினரும் இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் குழு வலியுறுத்துகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.