இன்று கொழும்பை ஆக்கிரமிக்க உள்ள தொழிற்சங்கங்கள்

 அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 40 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

 கொழும்பு – கோட்டை பகுதியில் இன்று பகல் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சுகாதாரம், கல்வி, துறைமுகம், மின்சாரம், வங்கி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

 “அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் திரள்வார்கள். இது மற்றுமொரு சமிக்ஞையே. இந்த துறைகள் அனைத்தும் தங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டால், இந்த நாடு செயலிழந்துவிடும் என்ற உண்மையை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.