பாராளுமன்றத்துக்கு வெளியே பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக அங்கு பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி நாடாளுமன்றில் அவர்கள் நுழைய முற்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
9ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் இன்று இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது இவ்வாறு அரசுக்கு எதிராக பௌத்த பிக்குகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, சுமார் ஐயாயிரம் பௌத்த பிக்குகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்துரையிடுக