மூதூரில் நபரொருவர் அடித்துக் கொலை

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை எனும் கிராமத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி கோகிலராசா (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

இரு நபருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பை ஏற்படுத்தியதாகவும் இதனால் படுகாயத்துக்கு உள்ளான குறித்த நபர் சிகிச்சைக்காக கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மரணித்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த வன்முறைச் சம்பவம் கிராமத்தின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது .

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-திருகோணமலை நிருபர் பாருக்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.