முன்விரோதம் காரணமாக இளைஞன் கொலை
அங்குலான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித சவேரியார் தேவாலயத்திற்கு அருகில் இளைஞன் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இக்கொலை நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்குலான மொரட்டு பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது மாமா வசிக்கும் இரத்மலானையில் உள்ள வீட்டிற்கு சென்ற போதே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் மாமாவும் காயமடைந்து லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போதைய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
கொலையை செய்த சந்தேகநபர்கள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கருத்துரையிடுக