பாண் விலையை குறைக்க முடியாது ஆனால் கேக்கின் விலையை குறைக்க முடியும்:-பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்!

பேக்கரி தொழில் துறையினருக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கு வழங்கப்படுமாயின் கேக்கின் விலையை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என்றும் பாண் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் கேக் ஆயிரத்து 200 ரூபா முதல் 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றை 30 ரூபாவுக்கு தொழில் துறையினருக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய முன்னதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையிலேயே பேக்கரி உரிமையாளர் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.