நடிகா் பிரபு மருத்துவமனையில் அனுமதி
திரைப்பட நடிகா் பிரபு சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை சிறுநீரக பிரச்னை காரணமாக நடிகா் பிரபு அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை யூரித்ரோஸ்கோப்பி லேசா் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கல் அகற்றப்பட்டது.