துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது
களுத்துறை தெற்கு சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் அடங்கிய மகசீன் மற்றும் 09 மி.மீ தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுகுருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தங்கியிருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 187 மதன மோதக மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் களுத்துறை வடக்கில் வசிக்கும் 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.