பிலிப்பைன்ஸில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

 பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோவில் ,இன்று 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் 8 கிமீ (4.97 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக EMSC தெரிவித்துள்ளது.

 கடந்த மாதம் 6ஆம் திகதி துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய பாரிய நில நடுக்கத்தினை தொடர்ந்து அந்த இரு நாடுகளிலும் தொடர்ச்சியாக சிறிய அளவிலான நில நடுக்கங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் நில நிலக்கம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களில் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.