ஓரிரு வருடங்களில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீளும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் வெற்றியடைவதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று (29) முங்காவிலுள்ள மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைபெற்றபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதம பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கடற்றொழில் அமைச்சர் மாணவர்களுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கி வைத்தார்.

இதற்குக் காரணமான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.