இலங்கை ரூபாய் ஆண்டு இறுதியில் டொலருக்கு நிகரான பெறுமதி இழக்கும்.தற்ப்பொழுதுள்ள நிலை தற்காலிகமானதே,.பிட்ச் பொருளாதார தர மதிப்பீடு
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பின் நம்பிக்கைக்கு மத்தியில் தற்போது சிறந்த செயற்பாட்டு நாணயமாக மாறியுள்ள இலங்கையின் ரூபாய் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் டொலருக்கு நிகரான பெறுமதியில் ஐந்தில் ஒரு பங்கை இழக்கக்கூடும் என பிட்ச் பொருளாதார தர மதிப்பீடு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் குழுவின் ஒப்புதலைப் பெற முடியும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளதாக பிட்ச் தர மதிப்பீட்டின் இடர் ஆய்வாளர் சீ வாங் டிங் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இடையூறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பிட்ச் தர மதிப்பீட்டின் இடர் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.