நுவரெலியா பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் கருப்பையா ஜெயராம் காலமானார்.

நுவரெலியா கந்தப்பளை பகலவத்த தோட்டத்தைச் சேர்ந்த முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரும், நுவரெலியா பிரதேசசபையின்( இ தொ கா ) உறுப்பினரும் , தற்பொழுது மலையக மக்கள் முன்னனியின் உப தலைவர்களில் ஒருவருமான கருப்பையா ஜெயராம் வயது 63 இன்று (13) திங்கட்கிழமை காலை தனது இல்லத்திலிருந்து சுகயீனமுற்ற நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவர்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட தலைவராக தனது தொழிற்சங்க அரசியலை ஆரம்பித்து  இச் சங்கதின் ஆதரவுடன் நுவரெலியா பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு தொழிற்சங்க அரசியலை செய்து வந்தார்.

கடந்த ஒரு வருடத்திற்க்கு முன் அவருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து அவர் இ தொ காவிலிருந்து விலகி நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வே. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னியில் இணைந்து அக் கட்சியில் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டு தனது தொழிற்சங்க அரசியல் சேவையை தொடர்ந்ததுடன் நடைபெறவிருக்கும் நுவரெலியா பிரதேச சபை தேர்தலில் மலையக மக்கள் முன்னணி சார்பில்  ஐக்கிய மகள் சக்தி வேட்பாளராக கந்தப்பளை வட்டாரத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கள் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது

இவரின் இறுதி கிரியைகள் நாளை (14) செவ்வாய்க்கிழமை பிற்பகல்  ஒரு மணியளவில் தனது கந்தப்பளை பகலவத்தை தோட்ட இல்லத்தில் நடை பெற்று நுவரெலியா மாநகரசபை பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.