இலங்கையில் உள்ள ரம்சா சதுப்பு நிலம் மற்றும் ஈரநில பூங்காக்கள் குறித்து இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி....

இலங்கையின் ரம்சா சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநிலப் பூங்காக்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெரிவிக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள ப
பெத்தகான ஈரநில பூங்கா மற்றும் கோட்டே, கொட்டுபெம்ம ஈரநில பூங்கா ஆகியவற்றை இலவசமாக பார்வையிடும் வாய்ப்பும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரம்சா சதுப்பு நில சுற்றுச்சூழல் பற்றி பள்ளி மாணவர்களுக்கு  கற்பிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் ஒரு கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த 100 சுற்றாடல் ஆர்வமுள்ளவர்களின்  பங்குபற்றுதலுடன் சுற்றாடல் கண்காணிப்பு மற்றும் ஆய்வு நிகழ்ச்சி நேற்று (01) இந்த ஈரநில பூங்காக்களை மையமாக வைத்து நடைபெற்றது. கோட்டே ஆனந்த அகடமி, நுகேகொடை புனித ஜோசப் பெண்கள் உயர்தரப் பாடசாலை, நுகேகொட றோயல் சர்வியஸ் உயர்தரப் பாடசாலை, களுபோவில தெற்கு கொழும்பு சர்வதேச பாடசாலை ஆகிய சுற்றாடல் ஆர்வமுள்ள மாணவர்கள் இதில் இணைந்து கொண்டனர். நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றாடல் மற்றும் தளவடிவமைப்பு பிரிவினால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுற்றுசூழல் ஆர்வமுள்ளவகள் முதலில் பெத்தகான ஈரநில பூங்காவிற்கு ஒரு கண்காணிப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர், பின்னர் அவர்கள் கோட்டே, கொடுபம்மெ ஈரநில பூங்காவிற்கு வந்தனர், அங்கு அவர்கள் ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்குபற்றினர். இங்கு அவர்கள் குழு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். சதுப்பு நிலங்கள், நகர்ப்புற சதுப்பு நிலங்கள், ரம்சா சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலங்களில் வாழும் விலங்குகள் மற்றும் தாவரங்களின் பாதுகாப்பு  போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது

இந்த சுற்றுச்சூழல் ஆர்வாளர்களுக்காக "பெத்தகான சோபா மிதுரோ" சங்கத்தின் உறுப்புரிமையும் இங்கு செய்யப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள ஈரநிலங்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்கள் ரம்சா மாநாட்டின் மூலம் சர்வதேச ரம்சா சதுப்பு நிலங்களாக நியமிக்கப்பட்டுள்ளன. 2,471 சர்வதேச ரம்சா சதுப்பு நிலங்கள் ரம்சா ஒப்பந்தத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. ரம்சா மாநாட்டில் இலங்கையில் உள்ள 6 சதுப்பு நிலங்களுக்கு ரம்சா சதுப்பு நிலங்கள் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டில் உள்ள ரம்சா ஈரநிலங்கள் புந்தல தேசிய வனப் பூங்கா, ஆனவிலுண்டாவ சரணாலயம், பலப்பிட்டிய மாதுகங்கை சரணாலயம், மன்னார் வான்கலே சரணாலயம், குமண சரணாலயம் மற்றும் வில்பத்துவ தேசிய வனப் பூங்கா ஆகியனவாகும். மேலும், இலங்கையின் கொழும்பு நகரமும் 2018 இல் ரம்சா மாநாட்டின் மூலம் நகர ஈரநில வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் பிரித்திகா பண்டார, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் (சுற்றுச்சூழல் மற்றும் தளவடிவமைப்பு) சந்தனா கலுபஹன மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.