அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த அவர், பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சென்ற பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்..

இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.