புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் கவன ஈர்ப்பு போராட்டம்

புதிய வரி அறவீட்டுக்கு எதிராக நுவரெலியா பிரதான அஞ்சல் நிலைய ஊழியர்கள் இணைந்து நுவரெலியா பிரதான அஞ்சல்  நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை  செவ்வாய்க்கிழமை நண்பகல்  முன்னெடுத்தனர்.

குறிப்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் தற்போது  அரசாங்கத்தின் சட்டவிரோதமான வரிக்கொள்கைக்கு எதிராகவும் , வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க கோரியும் , மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிராகவும் , அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக தெரிவித்து தபால் ஊழியர்களுக்குத் தேவையான சில கோரிக்கையை முன்வைத்தும்  அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டகாராக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.