2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2019.4.21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் போது 2019.4.26ஆம் திகதி கைது செய்யப்பட்ட சஹ்ரானின் மனைவி ஹாதியாவுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றில் பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு இன்றைய தினம் (15/03/2023) அவ்வழக்கானது கல்முனை மேல் நீதிமன்றில் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த சந்தேக நபர் மூன்று வருடங்களும் 10 மாதங்களும் விளக்கமறியலில் இருந்துள்ள காரணத்தினால் கல்முனை மேல் நீதிபதி ஜெ. ரொக்ஸி அவர்கள் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் பணம், இருபத்தி ஜந்து லட்சம் பெறுமதியான இரண்டு ஆட்பினையிலும் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார் . சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் சுகாசினி ஹேரத் அவர்களும் அரச சட்டவாதி சட்டமுதுமானி லாபீர் அவர்களும் சஹ்ரானின் மனைவி சார்பில் சட்டத்தரணி றுஸ்தி ஹபீப் அவர்களும் தெரிபட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.