எல்லேவல நீர்வீழ்ச்சி பலியெடுப்பது ஏன்?

 எல்லேவல நீர் வீழ்ச்சி பகுதியில் இயற்கையான நீர்த்தடாகம் உருவானது போல் தோற்றமளிக்கும் இடமானது, உண்மையிலேயே ஒரு பாரிய கிடங்காகும். 

காலங்காலமாக உமா ஓயாத் திட்டத்திலிருந்து சுண்ணாம்புக்கற்கள் கலந்த நீர் பாய்வதனால் இது ஒரு நீர் தடாகம் போல் தோற்றமளிக்கின்றது. 

இதனுள் மூடிக் காணப்படும் சுண்ணாம்புப் படிமமானது பல்வேறு சந்தர்ப்பங்களில் உடைந்து கீழ் இறங்குவதும், நீரில் அடித்துச் செல்வதுமாக அவ்வப்போது நிகழ்வது வழக்கமாகும்.

இவ்வாறான நிகழ்வுகள் எதிர்பாராத சந்தர்ப்பங்களில் இடம்பெறும்போது, அதன் மேல் உள்ளவர்கள் புதைவதும், நீரில் அடித்துச் செல்வதுமான துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன. 

இது தொடர்பில் எவ்வளவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், மக்கள் அவற்றைப் பொருட்படுத்தாமல் நீர் வீழ்ச்சியின் நீர் விழும் இடத்துக்கே செல்ல முற்படுகின்றனர்.

ஏபர்டின் நீர் வீழ்ச்சியைப் போல் எல்லேவல நீர் வீழ்ச்சியிலும் ஒரு மரண மணல் படுகை காணப்படுகிறது' என்பதனை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுக்கின்றனர்.

இதனுள் இறங்குவதற்கு முன்னர் நாம் அனைவரும் இது தொடர்பில் சிறிது கவனத்தில் கொள்வோம்.

ஒவ்வொரு உயிரும் மிகவும் பெறுமதி வாய்ந்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.