MEPS நிறுவனம் மற்றும் நாபாவல மகா வித்தியாலயம் இணைந்து நடாத்தும் சப்ரகமுவ மாகாணத்தின் 9A சித்தி பெற்ற தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியர்க்கான பாராட்டு விழா

 



சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்ற முஸ்லிம் பாடசாலையில் கற்ற தமிழ் , 
முஸ்லிம் மாணவ மாணவியர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் நாபாவல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்  நடைபெற ஏற்பாடாகி இருக்கின்றது. 

இந்  நிகழ்வானது இன்று  ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணி முதல் அவிஸ்ஸாவல  நாபாவல முஸ்லிம் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கின்றது. 


கொழும்பு முஸ்லிம் கல்வி முன்னேற்ற (MEPS) சங்கத்தின் பணிப்பாளர் எம். இஸட் . அஹமட்  முனவ்வர் தலைமையில்   நடைபெற இருக்கும்    இவ்விழாவிற்கு 
பிரதம அதிதியாக ஜனாதிபதி சட்டத்தரணி ,  தென்கிழக்குப் பல்கலைக் கழக வேந்தர் அல்ஹாஜ் பாயிஸ் முஸ்தபா அவர்களும் , சிறப்புப் பேச்சாளராக. மௌலவி அல்ஹாஜ் எம்.என்.எம். இஜ்லான் காஸிமி அவர்களும் கௌரவ அதிதியாக முஸ்லிம் சமய கலாசார  திணைக்கள பணிப்பாளர் இஸட் ஏ எம் பைஸல் அவர்களும்  சிறப்பு அதிதியாக  பிரபல சமூக சேவகர் எம். ஏ .எம் அஷ்ரப்   அவர்களும் , 
மற்றும் சகோதரர் சப்ராஸ் , எஸ் எச் எம் அஸ்வர்கான் ஆகியோரும் இன்னும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.

கருத்துகள்