கஹட்டோவிட்ட அல் பத்ரியா மாணவன் Raaif Hamdhan புதிய கண்டுபிடிப்பு ( காணொளி இணைப்பு ) : தொகுப்பு - பயாஸா பாஸில்

  Fayasa Fasil
By -
0

கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் தரம் பதினொன்றில்  கல்வி கற்றுக் கொண்டிருக்கும் Raaif Hamdhan  எனும் பாடசாலை மாணவன் முகமது இல்ஹாம் பாத்திமா சுமையா (ஸுவீனா)  தம்பதியரின் ஒரே மகனாவார். 


Raaif Hamdhan  சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய  மற்றும் தொழில்நுட்பம் சார் செயற்றிட்டங்களை , பல புதிய கண்டுபிடிப்புக்களை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். 


அவரது கண்டுபிடிப்புக்களில் ஒன்றான , சூழலிருந்து நுளம்புகளை விரட்டக்கூடிய ஒரு கருவியே இது. 

இது போன்று சூரிய சக்தியினால் மற்றும்  மின்கலங்களினால் இயங்கக் கூடிய சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார். 

தற்போது பெற்றோலினால் இயங்கக் கூடிய ஒரு சைக்கிளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இவரது சிறுவயது முதலான கனவும் இது என்று தெரிய வருகிறது. 

Raaif Hamdhan இன் கனவு நனவாக முயற்சிகள் வெற்றியடைய Siyane News சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. 

தொகுப்பு : பயாஸா பாஸில் 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)