புதிய அமைச்சரவை மாற்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பொதுஜன பெரமுனவின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் தெரியவருகிறது.

கடந்த காலங்களில் புதிய அமைச்சரவை மாற்றம் தொடர்பில் திகதிகளுடன் கூடிய பல்வேறு வதந்திகள் வெளியாகியிருந்ததோடு, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலும் அக்கட்சியின் தலைவர்களினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பல மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.