சப்ரகமுவ பல்கலைக்கழக  விரிவுரை செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரை செயற்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.

ஏனைய பல்கலைக்கழகங்களின் விரிவுரை செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின.

எனினும், தங்களது பல்கலைக்கழகத்தின் விரிவுரைகள் மாத்திரம் ஒருவாரத்தின் பின்னர் ஆரம்பிக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் விரிவுரைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகளில் பங்கேற்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.