காலி முகத்திடலை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!


காலி முகத்திடல் பகுதியை பொதுமக்கள் தமது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை துறைமுக அதிகாரசபையானது காலி துறைமுகத்தை சமூக பொறுப்புணர்வு திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

காலி முகத்திடலை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை 220 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடலை பொதுமக்கள் சுதந்திரமாக நேரத்தை செலவிடுவதற்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

இதன்படி, காலி முகத்திடலின் இயற்கை அழகுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.