மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

QR குறியீட்டை மீறி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மேலும், அந்தந்த எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து இந்த விதிமுறைகளை மீறும் விநியோகஸ்தர்களின் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமத்தை ரத்து செய்யவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்ததன் பின்னர், QR குறியீட்டின் தவறான பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.