அடுத்த வாரம் கட்சித் தலைவர்கள் கூட்டம்

அடுத்த வாரம் கட்சித் தலைவர்கள் கூட்டம்

பாரளுமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவாகும்.

இதன்படி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புத்தாண்டின் பின்னர் முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கருத்துகள்