தம்பதியரை கடத்திய 06 பேர் அதிரடிப்படையினரால் கைது 
 

தம்பதியரை கடத்திய 06 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் ஜயவர்தனபுர முகாமின் விசேட ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாய குழுவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட பெண்ணும் ஆணும் தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது.
அதன் பிரகாரம், கடத்தலை மேற்கொண்ட சந்தேக நபர்களில் ஒருவரின் காதலி முதலீடு செய்த பணத்தை செலுத்தத் தவறியதன் காரணமாகவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட பெண்ணும் கடத்தப்பட்ட ஆணும் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அங்கிருந்து வெளியேறுவதாக தெமட்டகொட பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வத்தளை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரும் மாகொல தெற்கு மாகொல பிரதேசத்தை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கடத்த பயன்படுத்திய முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.