பாம்பினால் 16,000 பேருக்கு நேர்ந்த கதி!
 


அமெரிக்காவில், ஆஸ்டின் மாகாண மின் நிலையத்திற்குள் புகுந்த பாம்பால் மாகாண மக்கள் 16 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதியடைந்தனர்.
இதுகுறித்து தெரிவித்த அம்மாகாண எரிசக்தி துறை அதிகாரி மாட் மிட்செல், மின் நிலையத்திற்குள் நுழைந்த பாம்பு, மின்சார சர்க்யூட்களில் ஊர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தியதால் 16 ஆயிரம் பேருக்கு மின் தடை ஏற்பட்டதாகவும், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க, மின் நிலையங்கள் முன்பு குறைந்த வோல்டேஜ் கொண்ட பாம்பு பிடி கூண்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.