கஹட்டோவிட்ட  அல்பத்ரியா மகா.வித்தியாலயத்தில் இல் கற்று , 25 வருடங்களின் பின்  ஆண் மாணவன் இக்ராம் அஹ்மத் பட்டதாரி ஆனார். 

 ஓர் ஆண்மகன் பல்கலைக்கழகம் தெரிவாக வேண்டும் என்பது ஓரிரு ஆண்டுகளது கனவு அல்ல, 25 வருட கனவாக இருந்தது. 
   
 2016 இல் இக்கனவு நனவானது. 2016 க.பொ.த உயர் தர பரீட்சையில் சித்தியடைந்து 13 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும் 2 மாணவர்கள் தேசிய கல்வியற் கல்லூரிக்கும் தெரிவாகி வரலாற்றுச் சாதனை படைத்தனர்.  
அந்த சாதனையில்  ஆண் மாணவன்   Ekraam Ahamedh சிறந்த பெறுபேற்றினை பெற்று பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி ஊர் கனவை நனவாக்கினார்.

இவர் தனது உயர் கல்வியை முடித்துக்கொண்டு
நேற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்று ஊருக்கும் எமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். 

இக்ராம் அஹ்மதை சியன நியூஸ் சார்பாகவும் , ஊர் மக்கள் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.. 
                         

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.