6 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு


லங்கா சதொச நிறுவனம் 06 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி, 400 கிராம் பால் மா (லங்கா சதொச) பொதியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,030 ரூபாவாகும்.

1 கிலோ காய்ந்த மிளகாயின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1350 ரூபாவாகும்.

ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

1 கிலோ சோயா மீட்டின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 660 ரூபாவாகும்.

1 கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுன் அதன் புதிய விலை 129 ரூபாவாகும்.

1 கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 239 ரூபாய் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலை குறைப்பு இன்று (24) முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.