இலங்கையில் 7 million (தெரு) நாய்கள் : கடந்த வருடம் 27 பேர் விசர்நாய்க்கடியால் உயிரிழப்பு

இலங்கையில் 7 million (தெரு) நாய்கள் : கடந்த வருடம் 27 பேர் விசர்நாய்க்கடியால் உயிரிழப்பு


சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி இலங்கையில் 7 million (தெரு) நாய்கள் உள்ளன.

இவற்றில் வருடாந்தம் 1.5 million நாய்கள்வரை Rabies தடுப்பூசி வழங்கப்படுகிறது.

நாட்டின் நிதி நெருக்கடி காரணமாக 2023 ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டமும் தடைப்பட்டு நிற்கிறது.

கடந்த வருடம் 27 பேர் (விசர்நாய்க்கடி) Rabies இனால் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் நாளாந்தம் சராசரியாக 2000 நாய்க்கடி (Dog Bite) Cases பதிவாகின்றன. (புதிய கணக்கெடுப்பு)

விசர் நாய்க்கடிக்கு உள்ளான ஒருவருக்கு ARV, ARS தடுப்பூசிகள் வழங்க சராசரியாக 50 ஆயிரம் வரை அரசு செலவிடுகிறது.

நாய்களுக்கு தடுப்பூசி, குடும்பக் கட்டுப்பாடு (Sterilisation) செய்ய பல பில்லியன்கள் செலவு செய்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

கட்டாக்காலி நாய்களை அழிக்கும் முன்மொழிவுகள் வருகின்றவேளை மிருக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கார்களில் ஓடிச் செல்லும்  சில ஒட்டாராக்கள் விடுவதில்லை.

 சுகாதார திணைக்களத்தின் தகவலின் படி இலங்கையில் வருடத்துக்கு 4,015,000 விபத்துக்கள் நிகழ்கின்றன. இதில் 33.1 வீதமான விபத்துக்கள் மிருகங்கள் கடிப்பதால் ஏற்படும் விபத்துக்கள்.

இரண்டாவது இடத்தில் இருப்பது வழுக்கி விழுதல் போன்றவற்றால் ஏற்படும் விபத்துக்கள். இவற்றுடன் ஒப்பிடும் போது பாதைகளில் ஏற்படும் வாகனவிபத்துக்களின் எண்ணிக்கை மூன்றாம் இடத்திலேயே உள்ளது.

வாகன வீதி விபத்துக்களால் தான் அதிகமான விபத்துக்கள் நிகழ்கிறது என்பது மக்களின் பொதுவான மனப்பதிவு. ஆனால் உண்மை நிலை அதுவல்ல. நாட்டின் அதிகம் விபத்துக்கள் நிகழ்வது நாய்க்கடி மூலம் தான் என்பது அரச தகவல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறையை பிரதான வருமானமீட்டும் ஒரு ஊடகமாக கொண்டுள்ளது.

சுற்றுலாத்துறை சார்ந்த TripAdvisor உட்பட பல இணையத் தளங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு இலங்கை பற்றி வழங்கும் முதலாவதும், பிரதானதுமான எச்சரிக்கை தெருநாய்கள் பற்றியதே.
#ZiyadAia

பிரபல எழுத்தாளர் விக்டர் ஐவன் தெரு நாய்கள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டு இருப்பார்;

//இலங்கையில் உரிமையாளரில்லாத பாதையில் திரியும் லட்சக்கணக்கான நாய்கள் உள்ளன. இந்த நாய்களால் ஏற்படும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களும் மிக அதிகம்.

அது மட்டுமல்ல பல்வேறுபட்ட நோய்களை காவும் மிருகமாகவும் இந்த நாய்கள் இருந்து வருகின்றன. அது மட்டுமல்ல இந்த நாய்களில் பெரும்பாலானவற்றுக்கு கிராமப்புற பாடசாலைகள் தான் தங்குமிடம். இவற்றின் மூலம் பரவும் நோயால் சில பாடசாலைகள் மூடப்பட்ட சந்தர்ப்பங்களும் கணிசமாகளவுள்ளன.

பாதைகளில் திரியும் உரிமையாளர்களற்ற கட்டக்காலி நாய்களை பிடித்து சென்று அவற்றை இல்லாமல் செய்யும் நடைமுறையை போன்று அதற்கு தேவையான சட்டமும் 1990இல் நாட்டில் அமுலில் இருந்தது.

இந்த முறை இல்லமாலக்கப்பட்டது ரோயல் கல்லூரி மாணவர் ஒருவரிடமிருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக. பிரதேச சபைகளினூடாக கட்டாக்காலி நாய்களை பிடித்து இல்லாமல் செய்யும் வேலைத்திட்டமும் அதனுடன் சேர்த்து இல்லாமல் போனது.

அதன் பிறகு இந்த தவறு எந்த அரசாலும் சரிசெய்யப்படவேயில்லை. அதனால் இன்று இந்த நாய்களால் ஏற்படும் பிரச்சினை பெருகி அதற்காக அரசுசெய்யும் செலவும் பலமடங்காக அதிகரித்துள்ளது.

“நாய்க்கு கட்டாயம் உரிமையாளர் இருக்க வேண்டும் இல்லாவிடில் அந்த நாய்கள் அழிக்கப்படுவதனை தவிர வேறு வழியில்லை என உலகின் மிகச் சிறந்த அகிம்சைவாதியான காந்தியே கூறியுள்ளார்.”

இப்படியான நாய்களால் அரசுக்கு ஏற்படும் செலவினங்களை நாட்டு மக்களுக்கு ஏற்படும் சுமையை ஓரு காலமும் Otara Gunewardene போன்ற சீமாட்டிகள் சுமக்கப் போவதில்லை. இதன் முழு சுமையையும் சாதாரண பொதுமக்களே சுமக்கின்றனர். இதனால் ஏற்படும் ஆபத்துக்களாலும் விபத்துக்களாலும் பாதிக்கப்படுவதும் சாதாரண பொதுமக்களே.

நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வீண் சுமையிலிருந்து மீள ஒரேயொரு வழி பாதைகளில் திரியும்கட்டாக்காலி நாய்களை இல்லாமல் செய்வது மாத்திரமே.

(Dr. Ziyad AIA)

கருத்துகள்