பாகிஸ்தான் சாலைகளில் திரண்ட இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம்

  Fayasa Fasil
By -
0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை துணை இராணுவத்தினர் கைது செய்ததை கண்டித்து சாலைகளில் திரண்ட இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். 


இந்தப் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. பொலிஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.


 பல இடங்களில் பொலிஸாருக்கும், போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பொலிஸார் மீது கற்கள் வீசப்பட்டது. 


இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் அலுவலக வீட்டை முற்றுகையிட்டுனர். 


அவர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பிரதமர் அலுவலக இல்லத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)