பிரித்தானிய தேர்தலில் இலங்கைப் பெண் வெற்றி
பிரித்தானியாவில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் செவெனோக்ஸ் பிராந்தியத்தில் போட்டியிட்ட இலங்கைப் பெண்ணான தினுஷா மனம்பேரி வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானிய பசுமைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட அவர், செவெனோக்ஸ் மாவட்ட சபைக்குத் தெரிவான முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.அவருடன் போட்டியிட்ட லாரா மாக்ஸ்டன், மார்க் லிண்டோக் ஆகியோரும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


தினுஷா மனம்பேரி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷானி என்ற பெயரை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.