மக்கள் தொகையை விட அதிகமான தொலைபேசிகளைக் கொண்ட நாடு இலங்கை

இலங்கையில் கையடக்க தொலைபேசிகள் உட்பட 31,382,000 தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

இந்நாட்டின் மக்கள் தொகை தோராயமாக இரண்டு கோடியே இருபத்தொரு இலட்சத்து எண்பதாயிரம்.


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2022 ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் நூறு (100) பேர் பயன்படுத்தும் தரைவழி தொலைபேசிகளின் எண்ணிக்கை 12 ஆகும்.

இது மொத்த தொகையில் தோராயமாக 2,652,000 ஆகும்.

மொபைல் போன்கள் உட்பட 100 பேர் பயன்படுத்தும் போன்களின் எண்ணிக்கை 142.

இணைய அடர்த்தி நூறு பேருக்கு 97.7.

கடந்த ஆண்டு (2022) டிஜிட்டல் தர வாழ்க்கைச் (Digital Quality Life) சுட்டெண்ணின் படி, இலங்கை 117 நாடுகளில் 89 வது இடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.