கண்டி மாநகரில் ஊடகக் கருத்தரங்கு

( மினுவாங்கொடை நிருபர் )

   அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இளம் எழுத்தாளர்களுக்கான முழுநாள் பயிற்சிக் கருத்தரங்கு ஒன்று, கண்டியில் எதிர்வரும் ஜூன் மாத நடுப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
   இந்தக் கருத்தரங்கு,  சம்மேளனத்தின் தேசியத் தலைவர் தேவஹுவ நிஜாமுதீன் தலைமையில் இடம்பெறும்.
   "கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் சமூக வலைத்தளங்கள் முதலானவற்றைப் பயன்படுத்துவது எவ்வாறு" போன்ற  விடயங்களை உள்ளடக்கிய இந்தக்  கருத்தரங்கில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் பங்கு பற்ற முடியும்.
   இதில் பங்கு பற்றும் மாணவ மாணவிகளுக்கு, உணவு மற்றும் காகிதாதிகள் வழங்கப்படுவதுடன்,  பெறுமதி மிக்க சான்றிதழ்களும் வழங்கப்படும் .
பங்குபற்ற விரும்புவோர், அகில இலங்கை இளம் எழுத்தாளர் சம்மேளன தேசிய அமைப்பாளர்  ரஷீத் எம். றியாழ் - 077 77 9 88 98  என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் (WhatsApp) மூலம் தகவல்களை அனுப்ப முடியும் என்று, சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மௌலவி ஐ.ஏ. காதிர் கான் தெரிவித்துள்ளார்.

( I.A. Cadir Khan )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.