அழிக்கப்படும் இலங்கையின் முதல் முஸ்லிம் பள்ளிவாசல் குளம்!! பொறுப்புக் கூறுவது யார்??

மஸ்ஜிதுல் அப்ரார்

இலங்கையில் மேல் மாகாணத்தில்களுத்துறை மாவட்டத்தில் பேருவளை மருதானை பிரதேசத்தை மையமாக கொண்டு அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசல் ‘மஸ்ஜிதுல் அப்ரார்’ ஆகும்.

இலங்கை வரலாற்றை நோக்கினால் முஸ்லிம் பள்ளிவாசல்களில் மிகவும் பழைமை வாய்ந்த பள்ளிவாசலாக கருதப்படுவது மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலினையே! ஆகும்.

இப் பள்ளிவாசல் கி. பி 920 ஆம் ஆண்டளவில் அரேபியாவில் இருந்து இலங்கை வந்த முஸ்லிம் வர்த்தகர்களால் கட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.


பள்ளிவாசலின் வரலாற்று அம்சங்களை கையாளுதல் மற்றும் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் கவனயீனமாய் இருந்தமை கவலைக்குரிய விடயமாகக் காணப்படுகிறது.

பேருவளை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் அப்துல் பாகீர் மாக்கார் அவர்களின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் 1986 ஆம் ஆண்டு பள்ளிவாயல் இடிக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.


2003 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்க தபால் திணைக்களத்தினால் மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலின் பழைய படம் பொறிக்கப்பட்ட இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டன.

பள்ளிவாசலுக்கு முன் பகுதியில் அழகாய் ஒரு குளம் அமைந்திருப்பது பள்ளிவாசலின் அழகிற்கு இன்னும் மெருகூட்டுவதோடு சுற்றுலாப் பயணிகளையும் பெரிதும் கவரச் செய்திருக்கின்றது.

குளத்தின் வரலாறு

பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ராரின் முன்பக்கத்தில் உள்ள குளத்தின் தோற்றமானது பள்ளிவாசலை கட்டுவதற்காக அக்காலத்தில் மணல் எடுக்கப்பட்ட இடத்தில் உருவான குழியே ஆகும்.


அதுவே! பிற்காலத்தில் குளமாக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

பச்சை நிறத்தில், எக்காலத்திலும் தூய்மையை பேணும் விதத்தில், கண்ணை கவரும் வண்ணம் அமையப்பெற்றுள்ள இக்குளத்தில் தினமும் பலர் நீராடுவதோடு, இஸ்லாமியர்களின் தொழுகைக்கு முன்னர் செய்யப்படும் ‘வுழு’ எனும் சுத்தமடையும் செயன்முறையியையும் செய்து வருகின்றனர்.

குளத்தின் தற்போதைய நிலை

இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களையும் மிகவும் கவர்ந்த இக்குளம் கடந்த சில மாதங்களாக சேற்று நிறத்தில் வற்றிக் காணப்படுகின்றமைகவலைக்குரிய விடயமாகும்.


இந்நிலை பள்ளிவாசலின் சுற்றுவட்டார அழகிலும் குறையாக தென்படுகின்றது.

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க இந்தக் குளத்தை இதே நிலையில் கைவிட்டுவிடாமல் குளத்தை பழைய நிலைக்கு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை உரிய தரப்பினர் எடுக்கவேண்டும் என ஊர்வாசிகள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.