யாத்திரை சென்ற வேன் விபத்து! 11 பேர் காயம்!
 


பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியில் மியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 3 ஆண்களும், 6 பெண்களும், இரண்டு குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பயணித்து கொண்டிருந்த வேனின் டயர் வெடித்து கவிழ்ந்ததில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பட்டுள்ளனர்.
யாத்திரைக்கு சென்று கொண்டிருந்த வெலிகந்த பகுதியை சேர்ந்தவர்களே இந்த விபத்து சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.