5 வயது குழந்தையின் உடல் மீட்பு, அருகே படுத்திருந்த நாய் குட்டிமுல்லேரியா – ஹல்பராவ பிரதேசத்தில் மர்மமான முறையில் 5 வயது குழந்தையின் சடலமொன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் நேற்று (08.06.2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மாலம்பே, ஹல்பராவ பிரதேசத்தில் வசிக்கும் 5 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இதன்போது 119 அவசர அழைப்புக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் முல்லேரிய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.இந்நிலையில் குறித்த குழந்தை கண்ணாடி போத்தலினால் ஏற்பட்ட காயங்களுடனும் இரத்தப்போக்குகளுடன் சடலமாக காணப்பட்டுள்ளார்.இது கொலையா என்பது தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் சிறுவனின் உடலில் அருகில் வளர்ப்பு நாய்க்குட்டி படுத்திருந்த உருக்கமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.