முதல் 5 மாதத்தில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனுப்பிய பெருந்தொகை பணம்


2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்களினால் இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பணம் அனுப்பப்பட்டுள்ளது.


மே மாதத்தில் தொழிலாளர்களின் பணம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இது மே 2022 உடன் ஒப்பிடுகையில் 175 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.


மே 2022 இல் இலங்கைக்கு 304.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டது.இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை மொத்தமாக 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.