தோட்டத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி 

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியோரத்தில் பங்கலாவத்த பகுதியில் விவசாய நிலத்தில் தொழில் புரிந்த விவசாய தோட்டத்திலிருந்து தவறி விழுந்த முதியவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த முதியவர் 70 வயதுடைய நானுஓயா எடின்புரோ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முதியவர் விவசாய தோட்டத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த போது மழையுடனான காலநிலை காரணமாக தோட்டத்தில் ஓரத்தில் இருந்து வழுக்கி நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில்  விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டதன் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட  வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வி.தீபன்ராஜ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.