வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன 
அரசாங்கம் திடீர் தீர்மானம்!

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் விரைவான தீர்மானத்தை மேற்கொள்ளும் எனவும்  வாகன இறக்குமதி இடைநிறுத்தம் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் இவ்வருட வரவு செலவுத்திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை சுங்கத்தினால் பெறமுடியவில்லை எனவும் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் கடன் உதவித் திட்டத்தின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்தால் அன்னியச் செலாவணியைச் சேமிக்கும் அதே வேளையில் சுங்க வருவாயை அதிகரிக்க முடியும் எனவும் இம்மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் எதிர்வரும் 06 மாதங்களுக்குள் 150 பில்லியன் ரூபாவை வரியாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.