எல்.பி.எல் ஏலம் குறித்த தகவல் வௌியானது


நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

அந்த தொடருக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு நாளை (14) கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் 200 தேசிய வீரர்களும், 160 வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரபல இந்திய அறிவிப்பாளரான சாரு ஷர்மா இந்த ஏலத்தை நடத்துவார் என லங்கா பிரீமியர் லீக், போட்டிப் பணிப்பாளர் சமந்த தொடன்வெல தெரிவித்தார்.

சுமார் 500 வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு விண்ணப்பித்ததாகவும், உரிமையாளர்களின் தலையீட்டால் வீரர்களின் எண்ணிக்கை 160 ஆகக் குறைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தேசிய கிரிக்கட் தெரிவுக்குழு மற்றும் விளையாட்டுக் கழகங்களினால் உள்ளூர் வீரர்களின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

நாளை நடைபெறும் ஏலத்தில், ஒரு அணிக்கு 500,000 அமெரிக்க ​டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அணியிலும் தற்போது ஒப்பந்தத்தின் கீழ் நான்கு வீரர்கள் உள்ளனர். (2 வெளிநாட்டு வீரர்கள், 2 தேசிய வீரர்கள்)

எனவே நாளை நடைபெறும் வீரர்கள் ஏலத்தில், ஒரு அணி 16 முதல் 20 வீரர்களை வாங்கலாம்.

ஒரு அணியில் உள்ள வீரர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 24 ஆகும். (முன்னா் ஏலத்தில் எடுத்த நான்கு வீரர்களும் அதில் உள்ளடக்கம்)

உலகின் தலைசிறந்த வீரர்களான பாபர் அசாம், டேவிட் மில்லர், ஷகிப் அல் ஹசனும் இந்த ஆண்டு எல்.பி.எல் தொடாில் இணையவுள்ளனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.