"உங்களைப்போல் யாருமில்லை யாறசூலே” நூல் வெளியீட்டு விழா

   பன்னூலாசிரியர் மெளலவி ஏ. றபியுத்தீன் (ஜமாலி) அவர்களின் 9 ஆவது நூலான “உங்களைப்போல் யாருமில்லை யாறசூலே” எனும் நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் (30) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு, அக்கரைப்பற்று புதுப்பள்ளியடி, மர்ஜூன் கட்டிடத் தொகுதியில், டாக்டர் எம்.ஏ. முபாரிஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
   சட்டத்தரணி மர்சூம் மெளலானா, பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சிரேஷ்ட ஊடகவியலாளர் 
இர்பான் மெளலானா, தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.ஜீ.எம். தெளபீக் ஆகியோர் இந்நூல் தொடர்பான ஆய்வுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.
   நூலாசிரியர் மெளலவி ஏ. றபியுத்தீன் (ஜமாலி), இவ்விழா நிகழ்வில் பதில் உரையாற்றவுள்ளார்.
   இச்சிறப்பு நூல் வெளியீட்டு விழா நிகழ்வில், அனைவரும் வந்து கலந்து நல்லாசி வழங்கிச் செல்லுமாறு, ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன்
அழைக்கின்றார்கள்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.