10/06/2023 அன்று சங்கத்தால் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான லீக் போட்டி தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் 2022 ஆம் ஆண்டு 2023 ஆம் ஆண்டுக்கான தங்க கிண்ணம் மற்றும் வெள்ளி கிணங்களுக்கான பரிசளிப்பு விழாவும் 

தங்கக் கிண்ண இறுதிப் போட்டியும் நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நடைபெற்றது. இதன் போது முன்னால் இலங்கை  உதைப்பந்தாட்ட சம்மேளணத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தலைமையில் இப்பரிசளிப்பு விழாவானது நடைபெற்றது.

 தங்கக் கிண்ண இறுதிப் போட்டியில் யங் பேர்ட்ஸ் மற்றும் யங்யுனைடெட் அணிகள் மோதின இதில் யங் பேர்ட்ஸ் அணி ஒன்றுக்கு பூஜ்யம் என வெற்றி பெற்றது.
போட்டி தொடரில் வெள்ளி கிண்ணத்தை ஸகிராப் தோட்டத்தை சேர்ந்த சன்பெர்ட்ஸ் அணியினர் பெற்றுக் கொண்டனர் இதில் சிறந்த விளையாட்டு வீரராக ஜே ஸ்டீபன் ராஜ் மற்றும் சிறந்த கோல் காப்பாளராக வி எஸ் கார்த்திக் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

 தங்கக் கிண்ணத்தை யங் பேர்ட்ஸ் அணியினரும் சிறந்த விளையாட்டு வீரராக வி. விவேக் அவர்களும் சிறந்த கோல் காப்பாளராக எம் யுனைடெட் அணியின் ரஹீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

 அதே வேலை ஏ பிரிவிற்கான போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட அணியாக நேஸ்பி லேக் சைட் அணியினரும் 

பி பிரிவிற்கான போட்டியில் முதலாம் இடத்தை ஹைபோரெஸ்ட் அணியினரும் 
சி பிரிவுக்கான போட்டி தொடரில் பிரண்ட்ஸ் அணியினரும் பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.
 போட்டிகளில் ஏ பிரிவு சார்பாக சிறந்த விளையாட்டு வீரராக நேஸ்பி அணி சார்பாக பிரவீன் குமார் அவர்களும்  
பி  பிரிவு போட்டி சார்பாக சிறந்த விளையாட்டு வீரராக ஐபோரெஸ்ட் அணியின் வினோத்குமார் அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
 இவ் பரிசளிப்பு விழாவானது முன்னாள் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்களின் தலைமையில் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.